📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English
KOKUVIL logo

KOKUVIL

எங்கள் கிராமம் • எங்கள் பாரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← அனைத்து செய்திகளுக்கு
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
செய்திகள்

கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு

📅 22 August 2026
👤
தகவல் வழங்கியவர்பத்மநாதன் மயூரன்
🔗
மூலம் Facebook
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரத்திற்குட்பட்ட கொக்குவில் மேற்கு வீதியை காப்பற் வீதியாக தரமுயர்த்தித் தருமாறு வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து அபிவிருத்தித் திணைக்கள வடமாகாணப் பணிப்பாளர் அவர்களிடம் 09.12.2025 அன்று எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து குறித்த வீதியின் புனரமைப்பு தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்தி வந்திருந்த நிலையில் தற்போது குறித்த வீதியை காப்பற் வீதியாக தரமுயர்த்தும் பணிகளை வீதி அபிவிருத்தித் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

மழைக்காலங்களில் குறித்த வீதியின் நிலைமையை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் அப்பகுதி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டை கருத்திற்கொண்டும் பிரதேச மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைக்கு இணங்கி மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே குறித்த வீதியை காப்பற் வீதியாக தரமுயர்த்தும் நடவடிக்கையை முன்னெடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறித்த பணியை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் வடமாகாணப் பணிப்பாளர் அவ ர்களுக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் அவர்களுக்கும் பொறியியலாளர் திரு. ஜெரோசன் அவர்களுக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் கடமையாற்றிய திரு.நிரோசன் அவர்களுக்கும் எனது சார்பிலும் கொக்குவில் மேற்கு பகுதி மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் நீண்டகால தேவையை கருத்திற்கொண்டு இப்பணியை விரைந்து முன்னெடுத்தமைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பத்மநாதன் மயூரன் தவிசாளர் நல்லூர் பிரதேச சபை

📷 புகைப்படங்கள்

6 படங்கள்
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
← அனைத்து செய்திகள்