KHC OSA (UK) – வசந்தம் 2026
📅 15 August 2026
KHC OSA (UK) வருடாந்த நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை, 3 அக்டோபர் 2026 அன்று நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு மட்டுமல்ல. எமது கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து, எமது நட்பையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்துவதுடன், எமது அன்புக்குரிய பாடசாலையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலனுக்கும் உதவும் ஒரு நல்ல நோக்கத்திற்காக பங்களிக்கும் சந்தர்ப்பமாகவும் இந்நிகழ்வு அமைகின்றது.
இந்த நிகழ்வின் வெற்றி எங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பிலும் பங்கேற்பிலும் தங்கியுள்ளது. எனவே, அனைத்து பழைய மாணவர்களும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு, இவ்வருட நிகழ்வையும் சிறப்பானதும் மறக்கமுடியாததுமான ஒரு வெற்றிநிகழ்வாக மாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனையில் உள்ளன. உங்கள் நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதுடன், உங்கள் பாடசாலை நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளிடமும் இந்நிகழ்வு பற்றிய தகவலைப் பகிர்ந்து, அவர்களையும் கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு நுழைவுச்சீட்டும், உங்கள் ஒவ்வொருவரின் பங்கேற்பும், நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ஆதரவும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரே KHC குடும்பமாக ஒன்றிணைவோம் – மகிழ்ச்சியான ஒரு மாலைப்பொழுதை பகிர்ந்து கொள்வதுடன், ஒரு நல்ல நோக்கத்திற்காகவும் கைகோர்ப்போம்.
சனிக்கிழமை, 3 அக்டோபர் 2026 அன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உங்களை அன்புடன் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். ஆதரிப்போம் • பங்கேற்போம் • அனைவரிடமும் பகிர்வோம்
KHC OSA (UK)