📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English
KOKUVIL logo

KOKUVIL

எங்கள் கிராமம் • எங்கள் பாரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← அனைத்து செய்திகளுக்கு
சூடு உகந்த விநாயகர் ஆலயம் கொக்குவில் மேற்கு – 2026
செய்திகள்ஆலயங்கள்

சூடு உகந்த விநாயகர் ஆலயம் கொக்குவில் மேற்கு – 2026

📅 25 August 2026

விநாயக அடியார்களே!

நிகழும் மங்களகரமான பராபவவருடம் ஆவணிமாதம் சுக்கிலபட்சமும் பூரணைத்திதியும் சதய நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய வியாழக்கிழமை (28.08.2026) காலை 8மணி முதல் எம்பெருமானுக்கு (108) அஷ்டோத்தர சங்காபிஷேகமும் விசேஷ பூஜையும், நடைபெற்று பகல் மகேஸ்வர பூஜையும் (அன்னதானம்) வழங்கப்படும்.


மாலை 5மணிக்கு வசந்தமண்டப பூஜையும் திருஊஞ்சல் வைபவமும் உள்வீதி வெளிவீதி ஊர்வலம் (கிராம ஊர்வலம்) நடைபெறும்.


இவ் விழாவில் விநாயக அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து எம்பெருமானைத்தரிசித்து சகல ஐஸ்வரியங்களும் பெற்று நீடூழி வாழ்வீர்களாக.


பி.குறிப்பு : அபிஷேகத்திற்கு தேவையான, பால், தயிர், நெய், தேன், பழவகைகள் பூக்கள், அறுகம்புல் பூ மாலைகள் வழங்கி விழாவை சிறப்பிப்பீர்களாக.

ஓம் சாந்திசாந்தி!! சாந்தி!!!


ஆலய தர்மகர்த்தா

(27.08.2026)


இங்ஙனம்

விழா உபயகாரர்கள்

← அனைத்து செய்திகள்