..:: Kokuvil ::.. - கொக்குவில் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது..

கண்ணீர் பூக்கள்.....
Saturday, 09.10.2011, 03:21am (GMT)

திருமதி சுகிர்தலஸ்மி சுப்பிரமணியம் புதன்கிழமை(07/09/2011) இறைவனடி சேர்ந்தார். 

கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக, பிரதி அதிபராக 40 வருடங்களுக்கு மேலாக, கொக்குவில் இந்துக் கல்லூரிக்கென வாழ்ந்த , ஒரு புனித உள்ளத்தை இன்று கொக்குவில் இந்துக் கல்லூரி இழந்து நிற்கின்றது. 

கனடா கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரதி தலைவராகவும் அதன் நிறுவுனர்களில் ஒருவராகவும் அமரர் சுகிர்தலஸ்மி கல்லூரிக்கு இடையறாது சேவையாற்றியுள்ளார். 

மாணவர் நலனில் உண்மையான அக்கறையுடைய ஆசிரியையாய் கல்லூரிகென அர்ப்பணிப்புடன் வாழ்ந்த ஒர் உயரிய பண்பின் சிகரத்தை கல்லூரி சமூகம் இழந்து தவிக்கின்றது. 

இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, கொக்குவில் இணையத்தளம் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கி கொள்கின்றது. 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். தொடர்புகளுக்கு ரகு- 0011 1 9058830524 அல்லது மின் அஞ்சல் - roshant@spmpatico.ca