கொக்குவில் மத்திய சனசமூக விளையாட்டுக்கழகம் 2010ஆம் ஆண்டு நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடரின் இறுதியாட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றிக்கிழமை காலை 9மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக அணி மோதவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி R.விமலனும் சிறப்பு விருந்தினராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியருமான S.உமாசுதனும் கலந்து கொள்ளவுள்ளனர்.