Saturday, 06.25.2022, 07:55pm (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது;

Friday, 11.12.2010, 07:08am (GMT+5.5)

2010 இன் இளம் விஞ்ஞானிகள் தெரிவில் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனுக்கு அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் 13c - bio வகுப்பைச் சேர்ந்த காலிங்கராசா ஹரிச்சந்திரா என்ற மாணவனுக்கே மேற்படி இரண்டாம் இட விருது வழங்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியில் அறுநூறு மாணவர்கள் தெரிவு முதலில் இடம்பெற்று பின்னர் அதில் இருந்து ஐம்பது மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் இருபது மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதியில் கண்காட்சி ஒன்று ஒக்டோபர் 8, 9, 10 களில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் Techno -2010 என்னும்பெயரில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு இறுதியில் தேசிய மட்டத்தில் காலிங்கராசார ஹரிச்சந்திரா இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும், பணப் பரிசும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை செல்வன் க. ஹரிச்சந்திரா சென்ற வருடம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட Innomech -2010 புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றி தேசிய மட்ட சான்றிதழை பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிறிதரபவான் சக்திதாஸ், பகீரதன் ஜெனகன் ஆகிய இரு மாணவர்களும் இறுதி தெரிவு வரை தெரிவுப் போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பான அம்சமாகும்.

கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திரா இளம் விஞ்ஞானிகள் தெரிவில் தமது படைப்பான சூழலுக்கு நண்பனாக அமைந்த மாதிரி வீட்டு நிர்மாண திட்டம் சிறப்புப்பெற்றது.

இத்திட்டத்தில் நாட்டுக்கு மிகவும் தேவையான மீளப்பயன்படுத்தக்கூடிய சக்தி மூலங்களை இயற்கையில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக சர்வதேசரீதியில் கவனத்தைப்பெறும் பசுமைக் கொள்கை கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வெளியேறும் சேதனக் கழிவுகளை பயன்படுத்தி உயிர்வாயு உற்பத்தி செய்ய முடியும். வீட்டின் அமைப்பானது சுற்றாடலுக்கு பாதகமில்லாததும் குடியிருப்பாளர்களுக்கு வசதியுள்ளதாகவும் அமைக்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகும்.

இதில் குடியிருப்பாளர்களுக்கு இயற்கையான காற்றைச் சுவாசிக்கவும் மழைக்காலத்தில் மழைநீர் உட்புகாதவாறு வீட்டு மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு துளி நீரும் வீணாகதவாறு சேமிக்கப்பட்டு அவை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்த முடியும்.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படும் வீடுகளில் இவ்வடிவமைப்பு பாவிக்கப்படல் சுற்றாடலுக்கு தீங்கு இல்லாது சிக்கனமான ஆரோக்கியமான ஒரு சுற்றாடலில் மக்கள் வாழக்கூடியதாக இருக்கும் என்று இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை பொறியியலாளர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
thinakaran

Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மஞ்சத்திருவிழா - 2010 (08.20.2010)
மஞ்சவனப்பதி முருகன் ஆலயப் பெருந்திருவிழா -2010 (08.12.2010)
கொக்குவில் பொற்பதி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா - 2010 (08.11.2010)
HTML clipboardமஞ்சவனப்பதி மருகன் ஆலய சைவசமய பரீட்சை-2010 (08.08.2010)
HTML clipboardகொக்குவில் சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (07.24.2010)
நூற்றாண்டு விழா – 16-07-2010 காலை நிகழ்வின் சுருக்கம் (07.17.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 25.06.2010 (06.25.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய மஞ்சம் புகைப்படங்கள் (06.22.2010)
கொக்குவில் நந்தாவில் மனோன்மனி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் (06.17.2010)
நந்தாவில் கற்புலத்து மனோன்மனி அம்பாள் ஆலய கொடியேற்றத்திருவிழா (06.17.2010) 
  ::| Events
June 2022  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30    
 

[Top Page]