Monday, 09.20.2021, 01:03am (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
யாழ் இந்து கல்லூரி அணியை வெற்றி கொண்டது கொக்குவில் இந்துக் கல்லூரி
Monday, 05.10.2010, 01:18pm (GMT+5.5)

மூன்றாவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் யாழ்ப்பாணம் இந்துவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூpக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி நேற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. தொடக்கம் முதல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பந்துவீச்சிளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தவித்தது. 10 ஆவது வீரராக களமிறங்கிய வீரர் பிரகாஸ் ஓரளவு அடித்து ஆட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 30.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிரகர் 22 ஓட்டங்களையும், சஜீகன், நிரூஜன் தலா 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக ராகுலன், சாம்பவன், பிரதீஸ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

100 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 19.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஆதித்தன், இராகுலன் தலா 25 ஓட்;டங்களையும், பங்குஜன் 19 ஓட்டங்களையும், சாம்பவன் 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இப்போட்டியின் சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த செந்தூரனும், சிறந்த துடுப்பாட்ட வீரராக கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆதித்தனும், சகலதுறை ஆட்டக்காரராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் இராகுலனும் தெரிவு செய்யப்பட்டனர்.
virakesari

Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
இந்துக்களின் இரவு - Hindus Night   (05.07.2010)
யாழ்ப்பாண இந்துக்கல்லூரி-கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான முதலாவது (05.04.2010)
BATTLE OF HINDUS - 2010 யாழ் குடாநாட்டின் மிகுபெரும் கிரிக்கெட் சமர். (04.29.2010)
கொக்குவில் இந்து ஜி.சி.ஈ (சா/த) பரீட்சை முடிவுகள் சில (04.14.2010)
மாணிக்க மணி பாராட்டு விழா மலர் (04.03.2010)
காங்கேசன்துறை வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள் (02.07.2010)



 
  ::| Events
September 2021  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30    
 

[Top Page]