Monday, 09.20.2021, 01:05am (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
செய்திகள்
 
யாழ்ப்பாண இந்துக்கல்லூரி-கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான முதலாவது
Tuesday, 05.04.2010, 02:39pm (GMT+5.5)

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையே இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள் அணிகளுக்கு இடையே முதல் தடவையாக இடம் பெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் அணியினர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் திங்கட் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம் பெற்றது நாண்ய சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அணியினர் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்கள்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் அணியினர் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை பெற்றனர்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி சார்பில் மணிவண்ணன் ஜந்து ஆறு ஓட்டங்கள் மூன்று நான்கு ஓட்டங்கள் உட்பட 48 ஓட்டங்களையும் சிவராசா 25, திபன் 21, ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் உதிரிகளாக 26 ஓட்டங்களும் பெறப்பட்டன.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் அணியைச் சேர்ந்த றொபேட்சன் 04 ஓவர்கள் பந்து விசி 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் , பிரதிபன் 04 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் , ஜெயரூபன் 03 ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களுக்கு ஓரு விக்கெட்டையும் , உமாநாத் 04 ஓவர்கள் பந்து வீசி 37 ஓட்டங்களுக்கு ஓரு விக்கெட்டையும் கைப்பிற்றனார்கள்.

140 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் அணியினர் 19.4 ஓவரில் 09 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தார்கள்.

கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சார்பில் ஜெயரூபன் 45,சபானாத் 31,தற்பரன் 13,ஓட்டங்களை பெற்றார்கள்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அணியைச் சேர்ந்த தீபன் 04 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டக்களையும்,உமாதரன் 04 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும்,அருண்குமார் 3.4 ஓவர்கள் பந்து விசி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்,ஜெனார்த்தனன் 04 ஓவர்கள் பந்து விசி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மணிவண்ணன் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சிந்துஜன் சிறந்த களத்தடுப்பாளராகவும் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அணியைச் சேர்ந்த ஜெயரூபன் ஆட்ட நாயகனாகவும் பிரதிபன் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுக்கான பரிசில்களை வடமாகாண விளையாட்டுத்தினைக்கள பிரதி பணிப்பாளர் சி.அண்ணாத்துரை கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கமலநாதன் பிரதி அதிபர் க.தேவராசா ஆகியோர் வழங்கி கௌரவித்தார்கள்.
virakesari

Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
BATTLE OF HINDUS - 2010 யாழ் குடாநாட்டின் மிகுபெரும் கிரிக்கெட் சமர். (04.29.2010)
கொக்குவில் இந்து ஜி.சி.ஈ (சா/த) பரீட்சை முடிவுகள் சில (04.14.2010)
மாணிக்க மணி பாராட்டு விழா மலர் (04.03.2010)
காங்கேசன்துறை வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள் (02.07.2010)



 
  ::| Events
September 2021  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30    
 

[Top Page]