Thursday, 02.02.2023, 03:55pm (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
கோயில்கள்
 
கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோவில்
Saturday, 08.21.2010, 07:14pm (GMT+5.5)

திருக்கோவில்கள் பல இருந்தாலும் இறை வழிபாட்டிற்கு ஏற்ற இடம் காடுகள், பொழில்கள், ஆற்றங்கரைகள், குளக்கரைகள், முச்சந்திகள், மணல்க்குன்றுகள், நந்தவனங்கள், ஊர் நடுவே மரத்தடிகள் என பல இடங்களைக் குறிப்பிடுவர். அந்தவகையில் இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் கொக்குவிலுக்கும், தாவடிக்கும் இடையே, எழில் மிகுந்த பிரதேசத்தின் நடுவே, நாகபாம்பு படமெடுப்பது போல ஒரு தெய்வீக வேப்பமாரத்தடியின் அடிப்பகுதியில் வேல் ஒன்று அமையப்பெற்றிருந்தது. இங்கே தினமும் பூசை நடைபெறுவது போல் நள்ளிரவு வேளைகளில் மணியோசை, வேத ஒலிகள் கேட்பதை அவ்வூர் மக்கள் அவதானித்தும், உணர்ந்தும் வந்துள்ளனர். எனவே அம்மக்கள் ஒன்றுகூடி சக்திவாய்ந்த அந்த வேலுக்கு ஓலையினால் வேயப்பட்ட சிறு கொட்டகை அமைத்து வழிபாடாற்றி வந்தார்கள். ஒருகாலப் பூசையும் பூசகர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்தது. வேற்பெருமான் வேப்பமரத்தடியில் கோவில் கொண்டதால் "வேம்படி முருகமூர்த்தி கோவில்" என்று பெயர் வரப்பெற்றது.


 
 1920 ஆண்டளவில் அன்பர்கள் ஈடுபாட்டுடன், கற்களால் கட்டப்பட்ட கருவறையில் மூலவராக வேற்மெருமான் பிரதிஸ்டை செய்யப்பட்டார்.
 பின்னர் அவ்வப்போது விநாயகர் சந்நிதி, சந்தானகோபாலர் சந்நிதி முதலியன நிறுவபபட்டன. காலப்போக்கில் மண்டபங்கள், விமானங்கள், தூண்கள் அமைக்கப்பட்டு கோவில் படிப்படியாக வளார்ச்சி கண்டது. இவ்வாலயத்தின் முதற் கும்பாபிஷேகம் 1938ம் ஆண்டு காலப்பகுதியில் நடந்ததுள்ளது. ஊர்மக்கள் பலர் திருக்கோவிலின் திருப்பணியில் தொர்ந்து உழைத்ததனால் கோவிலில் மேலும் பல புணருத்தாணங்கள் நிறைவேற்றப்பட்டு 1972ம் ஆண்டிலும், 1988ம் ஆண்டிலும் இரு கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இக்கலப் பகுதியில் சிறீவள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரர், சண்முகர், சிவலிங்கம், துர்க்கை அம்பாள், மகாலட்சுமி, பழனியாண்டவர், நடேசர், கொடித்தம்பப்பிள்ளையார் ஆகியனவும் கோவிலில் கூடுதல் பரிவாரமூர்த்திகளாக நிறுவியுள்ளனர். அத்துடன் கொடித்தம்பம், பலிபீடம், யாகசாலை, வசந்தமண்டபம், மற்றைய மண்டபங்கள், கூடங்கள் யாவும் அமைக்கப்பெற்று திருக்கோவில் பெரு மாற்றங்களைக் கண்டது. வேம்படி முருகப்பெருமான் அருளாலும், நிர்வாகத்தினரின் அயராத உழைப்பாலும் கோவில் பிரகாரங்கள், திருவீதிகள், மதில்கள் யாவும் மேலும் அழகுபெற அமைக்கப்பட்டு 2003ம் ஆண்டளவிலும் மகாகும்பாபிஷேகம் செய்துமுடித்துள்ளனர்.


 
 இத் திருக்கோவில் ஊர்மக்களால் தெரிவு செய்யப்பட்ட "தர்மகத்தா சபை" யினால் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தினசரி இங்கு ஐந்துவேளை பூசைகள் நடைபெற்று வருகின்றன. வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடிப்பூரம், ஆவணிஓணம், திருக்கார்த்திகை போன்ற அனைத்து நாட்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
 
 1972 ஆண்டு நிறைவேறிய மகாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து திருக்கோவில் பத்து நாட்கள் அலங்கார உற்சவங்கள் நடைபெற்று வந்தன. இறுதி நாளான பத்தாம் நாள் திருவிழா விசேடமானது. அன்று முருக பக்த்தர்கள் தீக்குளித்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் காட்சியைக் காணப் பெரும்திரளான மக்கள் கூடுவர். பின்னர் வேம்படி சிறீவள்ளி தேவசேனாசமேத முருகப்பெருமான் கிராம உலாவந்து, எளுந்தருளி, நாடிவரும் பக்தர்களுக்கு அருட்காட்சிதரும் வைபவமும் இடம்பெறும். இப் பத்து நாட்கள் அலங்காரவிழா இன்று மகோற்சவத்திருவிழாவாக நடைபெற்று வருகின்றன. பதினொராம் நாள் அன்னதானமும் நடைபெறும். வேம்படி முருகனை நாமும் வழிபட்டு நல்லருள் பெறுவோமாக.
நன்றி - கொக்குவில் நம் ஊர் புத்தகம்

Comments (0)        Print        Tell friend        Top


Other Articles:
கொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் ஆலயம். (06.05.2010)
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் (புதுக்கோயில்) (05.31.2010) 
  ::| Events
February 2023  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
 

[Top Page]