நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.
Thursday, 01.28.2010, 09:17am (GMT+5.5)
கொக்குவில் கோவில் பூமி நான் கொள்கைகள் வகுத்த பூமி. கோடிகள் அள்ளி கொடுப்பினும் கோடான கோடி தலங்கள் முடிப்பினும் பிறர் எட்டிடா நண்பர் பெற்று நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.
அங்கு கல்வியை கற்க வந்தேன் கல்வியும் கற்று கொண்டேன் கணப்பொழுதேனும் இதயம் பிரிந்திடா நண்பர் என்று இருவரைப் பெற்று எந்தன் இதயத்தை வகுத்த பூமி.
அங்கு வாழ்ந்தவை வசந்த நாட்கள் வசந்தமே தேடும் நாட்கள் குட்டி கடையிலே கூடி நின்று கூட்டமாய் பீடா தின்று பெட்டி கடையிலே பாணும் வாங்கி பிச்சையில் பட்டர் வாங்கி உண்டு நாம் இருந்த நாட்கள் இனி என்றுமே எட்டா நாட்கள்.
அவை காவியம் நடந்த நாட்கள் நான் வாழ்வினை உணர்ந்த நாட்கள்
அருண்மொழிவர்மன்
|