கொக்குவில் யாழ்பாணத்தில் 4 கி. மீ (3 மைல்) தொலைவில் அமைந்துள்ள
கிராமம்.கொக்குவில்; என்ற சொல்லிற்கு இரு அர்தங்கள் உண்டு. கொக்கு என்றால்
கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம்
பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று அர்தப்படும். கொக்குவில்
கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்.
HTML clipboardகொக்குவில் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பெரும்திருவிழாவின் தேர்த்திருவிழா
இன்று 24/07/2010 சனிக்கிழமை காலை
8.30 மணிக்கு வசந்த மண்டப பூசையை தொடர்ந்து
9.00 மணிக்கு விநாயகப் பெருமன் தேரில்
ஆரோகணிப்பார்
ஏரம்பு சுப்பையா (இ. ஜனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியர்களில் ஒருவர். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர்.யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர் அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து தாயகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார்.
1910 மதம் சார்ந்த பாடசாலை முறையின் கீழ் அடங்கிய பாடசாலைகளுள் ஒன்றாக இ.
செல்லையா அவர்களின் வழிகாட்டலில் 1910ம் ஆண்டு கொக்குவில் இந்து கல்லூரி
தாபிக்கப்பட்டது.
ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான்.
கொக்குவில் கோவில் பூமி
நான் கொள்கைகள் வகுத்த பூமி.
கோடிகள் அள்ளி கொடுப்பினும்
கோடான கோடி தலங்கள் முடிப்பினும்
பிறர்
எட்டிடா நண்பர் பெற்று
நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.